கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் தடிகாரன், வீரபத்திரன், கன்னிமார் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடந்தது.நேற்று முன்தினம் மாலை விக்னஷே்வர பூஜை, அனுக்ஞை, புண்ணியாவாகனம், கிராம சங்கல்பம், மகா கணபதி, மகாலஷ்மி யாகம், பிரவேச பலி ஆகியவற்றுக்குப்பின் யாக சாலை பிரவேசம் நடத்தினர். வேதிகை மேடைகளில் கும்ப கலசங்களை ஆவாஹனம் செய்து, தத்துவார்ச்சனை, மூல மந்திர யாகம் நடத்தப்பட்டது.நேற்று அதிகாலை சூரிய பூஜையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை செய்தனர். யாத்ரா தானத்திற்கு பின், காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கிராம தேவதைகளுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து, படையலிட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.