கிருஷ்ணகிரி: சிந்தகம்பள்ளி, வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில் தேர் பவனி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில், பழமையான பெருமாள் சுவாமி கோவில் இருந்தது.
சிதிலமடைந்திருந்த இக்கோவிலை கடந்த, 2010ல், இக்கிராமத்தை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி நான்காவது சனிக்கிழமையன்று, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, கொண்டு வரப்பட்ட உற்சவமூர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை நடந்த பூஜையில், பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வெங்கடேச பெருமாள் சுவாமி தேர்பவனியை துவக்கி வைத்தார். தேர்பவனி விநாயகர், முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அண்ணா நகர், சிந்தகம்பள்ளி, கெம்பிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களில் அனைத்து தெருக்களின் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலுக்கு வந்தது. வீடுகள் தோறும் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.