பதிவு செய்த நாள்
17
அக்
2019
11:10
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம் துவங்கியது. திண்டிவனம் - புதுச்சேரி மெயின் ரோட்டில் 36 அடி உயர ஆஞ்ஜநேயர் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருப்பவித்ரோத்சவம் நடைபெறும். இந்தாண்டு இன்று 17 ம் தேதி துவங்கி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 7.30 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் ஆரம்பமாகியது. அனுக்கை, யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்ஸங்க்ரஹரணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி திருவாராதனம் பவித்ரமாலைகள் சாற்றுதல், திருவாராதனம் சாற்றுமுறை நடைபெற்றது.
மாலை மஹாசாந்தி ஹோமம், திருவாராதனம் சாற்றுமுறை நடக்கிறது. 18 ம் தேதி காலை 7:00 மணிக்கு நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணாஹீதி, திருவாராதனம் சாற்றுமுறையும், 19 ம் தேதி புண்யாஹவாசனம், நித்ய ஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணஹீதி, சாற்றுமுறையும், வரும் 20 ம் தேதி காலை 8:00 மணிக்கு ப்ரதான ஹோமம், பூர்ணாஹீதி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலய வலமாக வந்து பவித்ரா மாலைகள் கலைதல், விஷேச திருவாராதனம், ஆழ்வார், ஆச்சாரியார்கள் மரியாதை, சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.