திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில்செலுத்தும் காணிக்கையை பவுர்ணமி தினம் முடிந்ததும் எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி முடிவடைந்த நிலையில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.இதில் பக்தர்கள் 1 கோடியே 84 ஆயிரம் ரூபாய் 179 கிராம் தங்கம் 597 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.