கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றம் சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகை உற்சவம் நடந்தது.அதனையொட்டி, நேற்றுமுன்தினம்மாலை 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு தீபாராதனையும் தொடர்ந்து, சுவாமிகள் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதே போன்று வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி உட்பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.