கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே மஞ்சாநாயக்கன்பட்டியில், முத்தாலம்மன் கோவில் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், பொதுக்கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாளம் வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், திரளான பக்தர்கள் கோவிலில் ஒன்று கூடி பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று மஞ்சள் நீராடுதல் மற்றும் கரகம் பொதுக்கிணற்றில் விடுதல் நடந்தது.