பதிவு செய்த நாள்
19
அக்
2019
10:10
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அக்., 27 காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்து சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
கோலாட்ட உற்ஸவம் அக்.,28 முதல் நவ.,2 வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு அக்.,28 முதல் 31 வரை மாலை 6:00 மணிக்கு ஆடி வீதிகளில் அம்மன் எழுந்தருளி பின் நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி, கொலுச்சாவடி சேத்தியாகுவார். நவ., 1 மாலை 6:00 மணிக்கு வெள்ளி கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடக்கும். நவ.,2 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதிகளில் புறப்பாடு நடக்கிறது. கந்த சஷ்டி உற்ஸவம் அக்.,28 முதல் நவ.,3 வரை நடக்கிறது. நவ.,3 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு (முத்துக்குமாரசாமி) வெள்ளிக்கவசம் சாத்துப்படி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கிறது என தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் கூறினர்.