பதிவு செய்த நாள்
19
அக்
2019
11:10
வடவள்ளி:வடவள்ளியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தையொட்டி, பூமிநீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான, வடவள்ளி கரிவரதராஜபெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள்தோறும் காம்யார்த்த ஹோமங்களும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. 14ம் தேதி, கருடவாகனத்தில் திருவீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, காம்யாத்த ஹோமமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.காலை, 9:00 மணிக்கு, வடவள்ளியில் உள்ள பெருமாள் கோவில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து, 10:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் கரிவரதராஜ பெருமாள், திருக்கல்யாணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பூமிநீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர்.