Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கன்னி: உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) இரவு பகல் போல இரண்டும் உண்டு வாழ்விலே! கன்னி: உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்:  (விசாகம் 4, அனுஷம், கேட்டை) புதுவீடு கட்டலாம் சொகுசு கார் வாங்கலாம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சங்கடம் தீர்க்க சனீஸ்வரர் இருக்கிறார்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:34

குரு பகவான்  இப்போது 3ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக குரு 3ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன் தான் நடக்குமோ என அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைகள் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடம் தான். குரு சாதகமற்று இருந்தாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை. காரணம் கேது, சனி சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் தருவர். நீங்கள் கீழே விழாதவாறு அவர்கள் தாங்கி பிடித்து கொள்வார்கள். சனி பலத்தால் சங்கடம் அனைத்தும் உடனுக்குடன் தீர்ந்து விடும்.

குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும் செலவுக்கு பஞ்சமிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம்.  

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. இருப்பினும் சனிபகவான் பொருளாதார வளம், தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகுவால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர்.

தனியார் துறை பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். ஆனால் குருவின் பார்வையால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டி பறிக்கப்படலாம். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.  

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனைக் காண்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவி வந்து சேரலாம்.  2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். தொழில் ரீதியான பயணம் செல்ல வாய்ப்புண்டு.  2020 ஆக.31 முதல்  சமூகநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்  மன உளைச்சலுடன் காணப்படுவர். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது பயனளிக்கும். குரு பார்வையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விடாமுயற்சியால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். நெல்,கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில்  கூடுதல் வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை.  

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர்.  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் மத்தியில்  பெருமை உயரும். அவர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு நண்பர்களின் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  உடல்நலக்குறைவு வரலாம்.

பரிகாரம்:
*  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
*  திங்களன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை
*  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »
temple
குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்
 
temple
இப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்
 
temple
குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.