Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சங்கடம் தீர்க்க சனீஸ்வரர் இருக்கிறார் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் –1) மனைவியால் நன்மை பிள்ளைகளால் பெருமை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் –1) ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) புதுவீடு கட்டலாம் சொகுசு கார் வாங்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:35

குருபகவான் 2ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இது வரை குருவால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். அப்போது சுமாரான பலன் என்றாலும் அவரது 5,7,9 பார்வைகள் சிறப்பான இடத்தில் விழுகின்றன.

கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு, வாகனம், மனை வாங்க யோகமுண்டு. வசதியான வீட்டிற்கு குடி போகும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிக்கு குறை விருக்காது. மங்களகரமான சூழல் உருவாகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். எந்த ஒரு முக்கிய செயலையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும். வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் இருக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகு குடும்பத்தில்  பிரச்னையை உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.

வியாபாரம் புதிய தொழில் தொடங்கலாம்.  வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திர தொடர்பான தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய தொழிலில் முதலீடு செய்து ஆதாயம் காண்பீர்கள். அரசிடம் இருந்து கடனுதவி கிடைக்கும். அதன் மூலமும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். ஆனாலும் குருபலத்தால் முறியடிப்பீர்கள். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த ஆதாயம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். முக்கிய பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு முன்னேற்றத்துக்கான வழிவகையை தேடவேண்டும்.  நம்பிக்கையுள்ள  பெரியோர்களின் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பணியாளர்களுக்கு உன்னதமாக காலகட்டமாக அமையும். குருவால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறை வேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ராணுவம், போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. 2020 மார்ச் 28  முதல் 2020 ஜூலை 7 வரை அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  புகழ், பாராட்டு வந்து சேரும். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளர்ச்சி காண்பர்.  எதிர்பார்த்த பதவி  கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை எதிலும் விடாமுயற்சியும், கவனமும் கொள்ள வேண்டியதிருக்கும். 2020 ஆகஸ்ட் 31 க்கு பிறகு அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் குருபலத்தால் நன்றாக படிப்பர்.  மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை பயன் உள்ளதாக அமையும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் சீரான பலன் கிடைக்கப் பெறுவர். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பணவிஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.

பெண்கள் குடும்பத்தில் சிறப்பான நிலை காண்பர்.  பிள்ளைகளால் மன நிம்மதி அடைவர். புதிய நகை, ஆடைகள் கிடைக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொருள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சியடைவர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தாருடன் விட்டு கொடுத்து போவது நல்லது. குருபகவானின் பார்வையால்  திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சி நடந்தேறும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

பரிகாரம்:
*  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
*  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி தரிசனம்
*  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »
temple
குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்
 
temple
இப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்
 
temple
குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.