வீதிக்கு வீதி இப்போது முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன. பெற்றோர் மீது பாசபந்தம், நன்றியுணர்வு இல்லாமல் போனதே இதற்கு காரணம். இறைச் சிந்தனைக்கு செவி மடுத்தால் நம் உள்ளத்தில் அன்பும், கருணையும் பெருகும். பெற்றோரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் சேர்ந்து இருந்தால் ’சீ’ என்று கூடச் சொல்லாதீர். எந்த சூழ்நிலையில் அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீர். மேலும், பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக என்கிறான் இறைவன். மனிதன் சொர்க்கத்தை தேடி அலைய வேண்டாம். வீட்டில் நம்முடன் இருக்கும் பெற்றோருக்கு சேவை செய்வதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம். முதுமையில் வாழும் பெற்றோரை குழந்தையாக கருதி அரவணையுங்கள். அவர்களுக்கு தேவை அன்பு நிறைந்த பராமரிப்பு!