பதிவு செய்த நாள்
22
அக்
2019
03:10
*அக்.19, ஐப்பசி 2: திருநெல்வேலி காந்திமதியம்மன்
ரிஷப வாகனம், இரவு இந்திர விமானத்தில் பவனி, தூத்துக்குடி பாகம்பிரியாள்
பவனி, உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு,
குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை
* அக்.20, ஐப்பசி 3: திருநெல்வேலி
காந்திமதியம்மன் அன்ன வாகனம், தென்காசி உலகம்மை பவனி, ஸ்ரீபெரும்புதூர்
மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர்
கோயிலில் அனுமாருக்கு திருமஞ்சனம், தஞ்சாவூர் ராஜராஜசோழன் 1034வது
பிறந்தநாள்.
* அக்.21, ஐப்பசி 4: பத்ராசலம் ராமர் புறப்பாடு,
திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் திருக்கோலம், இரவு காமதேனு
வாகனம், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி, உத்திரமாயூரம் வள்ளலார்
சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப
பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு
திருமஞ்சனம்.
* அக்.22, ஐப்பசி 5: சக்தி நாயனார் குருபூஜை, நெல்லை
அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் தருமபதி பஞ்சரத்ன பூஜை, நெல்லை
காந்திமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு கிளி வாகனம்,
சோளிங்க நல்லூர் அமிர்தவல்லித்தாயார் திருக்கல்யாணம், திருமயம்
சத்தியமூர்த்தி பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை
சூடியருளல்
* அக்.23, ஐப்பசி 6: திருநெல்வேலி காந்திமதியம்மன் மாலை
சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கு, வீரவநல்லூர் மரகதாம்பிகை பவனி,
ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்
*
அக்.24, ஐப்பசி 7: ஏகாதசி விரதம், முகூர்த்த நாள், தூத்துக்குடி
பாகம்பிரியாள் வீதியுலா, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி
அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி
மாளிகை எழுந்தருளல், திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு
*
அக்.25, ஐப்பசி 8: பிரதோஷம், சிவன் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரர்
அபிஷேகம், திருநெல்வேலி காந்திமதியம்மன் தபசு, தென்காசி, பத்தமடை,
வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடையம் தலங்களில்
திருக்கல்யாணம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம்
எழுந்தருளல்