வேணுகோபால ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக 2ம் ஆண்டு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2012 11:04
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா பாண்டி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்து, இரண்டாமாண்டு நிறைவு விழா நேற்றுக்காலை நடந்தது. காலையில் ஒன்பது மணிக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கெடங்கள் புறப்பட்டு, வேணுகோபால ஸ்வாமி, ருக்குமணி சத்தியபாமா, ஸ்ரீ விஸ்ணுதுர்க்கை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர், திருமஞ்சனம் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. மாலையில் நான்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து இரவு பெருமாள் வீதியுலாவும் நடந்தது. சென்னை நங்கநல்லூர் அமிர்தவல்லி, ராகவன் ஆகியோர் சார்பில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு பூஜைகளை பட்டாச்சாரியார் கண்ணன் செய்திருந்தனர். ஏற்பாட்டை பாண்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.