திருக்கோவிலுார் : சோமவார அமாவாசையை முன்னிட்டு திருக்கோவிலுார், ரகூத்தமர் கோவிலில் பக்தர்கள் அரசமரத்தை வலம் வந்து வழிபட்டனர்.
சோமவார தினத்தில் அரச மரத்தை வலம் வந்து, நாகலிங்கத்தை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அந்த வகையில், மணம்பூண்டி அடுத்த பிருந்தாவனம், ரகூத்தமர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரமும், வேப்ப மரமும் ஒன்றாக இணைந்த நாகலிங்கத்தை நேற்று (அக்., 28ல்)அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.