பதிவு செய்த நாள்
29
அக்
2019
02:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில் களில், கந்த சஷ்டி விழா நேற்று (அக்., 28ல்) துவங்கி, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நடைபெறு கிறது.
திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று (அக்., 28ல்) துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முக பெருமானுக்கு லட்சார்ச்சனை துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடந்தது.
மூலவருக்கு இன்று (அக்., 29ல்) பட்டு, நாளை (அக்., 30ல்) தங்ககவசம், 31ம் தேதி திருவா பரணம், நவ.1ம் தேதி வெள்ளி கவசம், 2ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, சண்முகப் பெருமானு க்கு புஷ்பாஞ்சலியும், 3ம் தேதி, காலை, 11:00 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
ஆறுபடை வீடுகளில், முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால், திருத்தணி கோவிலில் மட்டும், முருகன் கோபம் தணிந்த இடம் என்பதால், புஷ்பா ஞ்சலி நடக்கும்.ஏழு நாட்களும், மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை மலைக் கோவிலில் பக்தி ஆன்மிக சொற்பொழிவு நடக்கும்.நேற்று (அக்., 30) முதல் நாளில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.