பதிவு செய்த நாள்
29
அக்
2019
02:10
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்ச வம் துவங்கி, வீதியுலா சென்றார்.இக்கோவிலில், நேற்று முன்தினம், (அக்., 27ல்)பூதத்தாழ்வார் அவதார உற்சவம்துவங்கியது.
இதை முன்னிட்டு, மாலை, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.திருப்பாவை சேவையாற்றி, அவர் வீதியுலா சென்றார். கோவிலுக்கு திரும்பி, திருவாய்மொழி சேவை நடந்தது. நவ., 5ம் தேதி வரை, தினமும், மாலை, அவருக்கு திருமஞ்சன உற்சவம் நடந்து, வீதியுலா செல்கிறார்.