காரைக்கால்: காரைக்காலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில், பார்வதீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், ஒப்பிலாமணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.முன்னதாக குருபகவானுக்கு சிறப்பு பல்வேறு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதுபோல் நெடுங்காடு, திருப்பட்டினம், அம்பகரத்தூர் உள்ளிட்ட பல்வேறு குருபகவான் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபட்டனர்.