அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா நவ., 7 மாலை 6.30 மணிக்கு நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் துவங்குகிறது.
நவ., 8 மாலை சீராப்தி நாதன் சேவை நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக நவ., 9 காலை 8.30 மணிக்கு மேல் கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் அழகர்மலை அடிவாரத்தில் இருந்து பல்லக்கில் மலைபாதை வழியாக மலைஉச்சியில் உள்ள நுாபுரகங்கைக்கு செல்வார். அங்கு மாதவி மண்டபத்தில் பகல் 2:00 மணிக்கு பெருமாளுக்கு பல்வேறு வகை வாசனை திரவியங்கள் மூலம் திருத்தைலம் சாத்தப்பட்டு திருமஞ்சனம் நடக்கும். பின் நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடுவார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.