பதிவு செய்த நாள்
29
அக்
2019
04:10
செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. குருபகவான் அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். இதை முன்னிட்டு செஞ்சி காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் சந்தை மேடு ஐய்யப்பன் கோவிலில் குரு பகவானுக்கு அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், அதிகாலை 3.49 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து குரு பெயர்ச்சியால் பயன்பெறும் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிகளுக்கும், குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.