பதிவு செய்த நாள்
31
அக்
2019
03:10
சென்னை: நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி பெண்கள் வழிபட்டனர்.
தீபாவளி நோன்பு முடிந்து ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி, இன்று சென்னை, அமைந்தகரை, ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், நாக சிலைகளுக்கு, பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். நாக சிலை மற்றும் புற்று கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நாக சிலைகளுக்கு, பாலாபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமமிட்டு, பெண்கள் பூஜை செய்தனர். புற்றுக்கு பால் ஊற்றி, முட்டை வைத்து, பெண்கள் வழிபட்டனர்.