பதிவு செய்த நாள்
01
நவ
2019
02:11
திருத்தணி: நாகசதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பாம்பு புற்றிக்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.
தீபாவளி முடிந்து, ஐந்தாம் நாளில் நாகசதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்படுகிறது. நாகசதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன், காந்தி நகர் நாகாலம்மன், முருகப்ப நகர் நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில், புற்றில் முட்டை, பால் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். இதே போல், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழாவையொட்டி பெண்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பாம்பு புற்றில் பால், முட்டை ஊற்றி வழிபட்டனர். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை அம்மன் கோவில்களில் திரளான பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.