காரமடை அரங்கநாதர் கோவிலில் மணவாள மாமுனிக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2019 02:11
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், மணவாள மாமுனிகள் உற்சவம் நடந்தது. கோவிலில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியில் மூலவருக்கு திருமஞ்சனம், காலசந்தி பூஜை நடந்தது.
பின், மணவாள மாமுனிகள் உற்சவர் சிலை ராமானுஜர் சன்னதியில் எழுந்தருளச் செய்து ஸ்தபன திருமஞ்சனம் சிறப்பு அலங்காரத்துடன் ரங்க மண்டபத்தில் வைத்து, அரங்கநாதர் சுவாமிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.கோவில் ஸ்தலத்தார் உபதேசரத்தினமாலை பிரபந்த பாசுரம் சேவித்தனர்.பின்னர் திருக்கோவில் வலம் வந்து ராமானுஜர் சன்னதியில் சாற்றுமுறை சேவிக்கப்பட்டு, மங்கள ஆரத்தி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.