பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே உள்ள மீனாட்சி கார்டன்ஸ் குடியிருப்பில் ராஜராஜேஸ்வரி அம்மன், ஞான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிர தம்பதிகளுடன் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை சப்த கன்னிகை, ஸ்ரீ கருப்பராயர் ஆகிய பரிவார தெய்வங்களுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (நவம்., 3ல்) காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, இன்று (நவம்., 2ல்) காலை திருமுறை பாராயணம், கோபுர சுதை சிற்பங்களுக்கு கண் திறந்து, கலசம் வைத்தல், மாலை தனபூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.