பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சக்தி கணபதி மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம், ஓலப் பாளையத்தில், வரும், 3ல் சக்தி கணபதி மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கடந்த, 18ல் யாக சாலை கால்கோள் விழா, நேற்று (நவம்., 1ல்) அதிகாலை, கணபதி ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணியளவில் காவிரியிலிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இன்று (நவ., 2ல்) மற்றும் நாளை (நவ., 3ல) யாக சாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. 3 காலை, 9:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடக்கவுள்ளது.