பதிவு செய்த நாள்
02
நவ
2019
02:11
திருத்தணி:திருத்தணி, முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில், இன்று (நவ., 2ல்), உற்சவ ருக்கு புஷ்பாஞ்சலியும், நாளை (நவ., 3ல்), திருக்கல்யாணமும் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலில், அக்டோபர், 28ம் தேதி, மூலவருக்கு புஷ்ப அலங்காரத்துடன், கந்தசஷ்டி விழா துவங்கியது.தினமும் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது.ஐந்தாம் நாளான நேற்று (நவ., 1ல்) காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று (நவம்., 2ல்) காலை, மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் மாலை, 5:00 மணி க்கு காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 1 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாளை (நவ., 3ல்) காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறை வடைகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனி குமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.