பதிவு செய்த நாள்
04
நவ
2019
03:11
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், முரளிதர சுவாமிகளின், 59வது ஜெயந்தியையொட்டி, நேற்று 3ம் தேதி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.
இதையொட்டி, 59 தம்பதி பூஜை, 200 பெண்கள் பங்கேற்ற லலிதா சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. பின்னர், 10 லட்சம் ரூபாய் செலவில், தன்வந்திரி பீட வளாகத்தில் அமைக்கப்பட்ட பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை சங்கமம், ஜலஜா கோபால கிருஷ்ணன் குழுவினரின் சூக்த பாராயணம், கோடி ஜப மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்காச ஹோமம் பூர்த்தி விழா நடந்தது. முரளிதர சுவாமிகள், லலிதாசமிதி மோகன் குருஜி, வேலூர் மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார், திருச்சி மாதா அன்னபூரணி பிரம்மபீடம் பாலசுப்ரமண்ய குருக்கள், நெமிலி பாலா பீடம் எழில்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோம ம், சதுர் வேத பாராயணம், அன்னதானம் ஆகியவை நடந்தன. வேலூர் கிருஷ்ண கலா மந்திர் மாணவியரின் பரத நாட்டியம், குரு நித்ய கலா ஆச்சாரிய காயத்திரி கோபிநாத்தின் குச்சுப்புடி நடனம் நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட திருஷ்டி டாலர் பிரசாத மாக வழங்கப்பட்டன. முரளிதர சுவாமிகளின் பக்தி சொற்பொழிவு நடந்தது.