பதிவு செய்த நாள்
05
நவ
2019
03:11
வாஸ்து பகவான் நித்திரை விடும் நாளில் புதிய வீடு கட்ட பூமிபூஜை செய்வது சிறப்பு. இதற்கு தேவையான பொருட்கள் பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுபத்தி, பஞ்சலோகம், நவதானியம். முதலில் விநாயகர், குலதெய்வம், இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின் மனையின் வடகிழக்கு மூலையில் 3அடி நீளம், 3 அடி அகலத்தில் குழி தோண்டி மூன்று செங்கற்கள் எடுத்து அதில் சந்தன குங்குமம் இட்டு ஊன்ற வேண்டும். தொடர்ந்து மூன்று சுமங்கலிகள் தண்ணீர், பால் விட வேண்டும். பின்னர் பஞ்சபூதங்களை வழிபட்டு பஞ்சலோகத்தையும், நவக்கிரகங்களை வழிபட்டு நவதானியங்களை வைக்க வேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஊதுபத்தி, சாம்பிராணி துாபமிட வேண்டும். இதன் பின் கட்டுமானப் பணிகளை தொடங்குவது சிறப்பு.
வாஸ்து பூஜை: நவ. 24 கார்த்திகை 8 காலை 11:29 – 12:05 மணி