ஒரு சமயம் அபூஜஹலும், அவனது தோழர்களும், ”நபிகளே! அமாவாசை நேரத்தில் வானில் நிலவை வரச் செய்து அதை இரண்டாகப் பிளக்க முடியுமா?” எனக் கேட்டனர். “இறைவன் உதவியால் நீங்கள் சொல்வது போல செய்து காட்டினால் என்னை நபி என ஏற்பீர்களா?” என நாயகம் கேட்டபோது, “நிச்சயம் ஏற்கிறோம்,” என்றனர்.
அதன்படியே விரலால் அழைத்ததும், வானில் நிலவு தோன்றியதோடு இரு துண்டாகப் பிளந்தது. இந்த அற்புதத்தைக் கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். நற்செயலில் ஈடுபடுவோம் ”செயல்களின் விளைவு எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் கிடைக்கும். நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல்களுக்கு மறுவுலகில் நிச்சயம் கூலி கிடைக்கும். ஆனால் உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செயல்பட்டால் மறுவுலகில் அந்த செயல் விலை போகாது. அதாவது ஒருவனது செயல் அங்கு செல்லாக் காசாக கருதப்படும். ”இறைவன் உங்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை; மாறாக உங்களின் உள்ளம், செயல்களைத் தான் பார்க்கிறான்”