பதிவு செய்த நாள்
06
நவ
2019
12:11
ஈரோடு: ஈரோடு, கோட்டை சின்னப்பாவடி, பத்ரகாளியம்மன் கோவிலில், திருப்பணி சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு, நிறைவடைந்துள்ளது. வரும், 15ல் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதையொட்டி நாளை காலை, முளைப்பாலி போடுதல், 8ல் கணபதி ஹோமம், 10ல் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருதல், 12ல் நவக்கிரஹ யாகம், 13ல் கும்ப அலங்காரம், கங்கணம் கட்டுதல், 14ல் யாகசாலை பூஜை துவக்கம், அஷ்ட பந்தன மருந்து சாற்றி, சுவாமியை நிலை நாட்டுதல் நடக்கிறது. மஹா கும்பாபிஷேகம், 15ல் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.