பதிவு செய்த நாள்
07
நவ
2019
04:11
பவானி: இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு தொடர்பாக, சேலம் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன், நேற்று பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து, பவானி தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் மற்றும் அதிகாரிகளுடன், பவானி கூடுதுறையில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் அதன் பரப்பளவு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர், நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 15 லட்சம் ஏக்கர், பரப்பளவில் நிலங்கள் உள்ளன. ஆனால், இந்து அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது, 4.75 லட்சம் ஏக்கர் இருப்பதாக தவறாக தெரிவித்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருவாயை முறைப்படுத்தினால், அரசுக்கு மதுபான விற்பனையில் கிடைக்கும் வருவாயை விட, கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.