பதிவு செய்த நாள்
07
நவ
2019
04:11
சேலம்: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கு, சேலம் வழியே, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொல்லம் - காக்கிநாடா சிறப்பு கட்டண ரயில், நவ., 17, 21, 25ல், காலை, 10:00 மணிக்கு, கொல்லத்திலிருந்து கிளம்பி, திருச்சூர், கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, அடுத்தநாள் மதியம், 2:50க்கு, காக்கிநாடாவை அடையும். கொல்லம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில், நவ., 23, 27, டிச., 1ல், காலை, 3:00 மணிக்கு, கொல்லத்திலிருந்து புறப்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, மறுநாள் காலை, 10:45க்கு, ஐதராபாத்தை அடையும். கொல்லம் - சென்னை, சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், நவ., 23, 30ல், மதியம், 3:00 மணிக்கு, கொல்லத்திலிருந்து கிளம்பி, சேலம் வழியே, சென்னைக்கு, அடுத்தநாள் காலை, 9:50க்கு சென்றடையும். சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு கட்டண ரயில், நவ., 17, 24ல், மாலை, 4:14க்கு, சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே, மறுநாள் காலை, 10:10க்கு, கொல்லத்தை அடையும்.
கொல்லம் - சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், நவ., 18, 25ல், மதியம், 3:00 மணிக்கு கொல்லத்திலிருந்து கிளம்பி, சேலம் வழியாக, மறுநாள் காலை, 7:20க்கு சென்னையை அடையும். சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு கட்டண ரயில், நவ., 16, 23, 30ல், இரவு, 8:30க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே, அடுத்தநாள் மதியம், 12:00 மணிக்கு கொல்லத்தை அடையும். சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு கட்டண ரயில், நவ., 21, 28ல், சென்னையிலிருந்து இரவு, 7:00 மணிக்கு கிளம்பி, சேலம் வழியாக, அடுத்தநாள் காலை, 11:45க்கு திருவனந்தபுரத்தை அடையும். திருவனந்தபுரம் - சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், நவ., 20, 27ல், திருவனந்தபுரத்திலிருந்து மாலை, 3:45க்கு புறப்பட்டு, சேலம் வழியே, மறுநாள் காலை, 9:45க்கு சென்னையை அடையும். கோவை - சந்திராகச்சி சுவிதா சிறப்பு ரயில், நவ., 8 இரவு, 9:45க்கு கோவையிலிருந்து கிளம்பி, சேலம் வழியாக, நவ., 10, காலை, 8:45க்கு சந்திராகச்சியை அடையும். இதற்கான முன்பதிவு, நேற்று தொடங்கியது. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.