பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
காலை 10:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, காலை 11:30 மணி யளில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங் களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது.
மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்கரத்தில் நந்தி பகவான் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நடுவீரப்பட்டு நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சனிபிரதோஷ பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு மாலை 5:00 மணி க்கு விநாயகர்,பிரதோஷ நாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம்சனிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் 8ம் தேதி காலை 8:00 மணிக்கு முன் மண்டப வளாகத்தில் உள்ள அதிகார நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; காலை 8:30 மணிக்கு அருகம் புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை 4:45 மணியளவில் கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், இறை யூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.