வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று 9ம் தேதி நடந்தது.அதனையொட்டி மூலவர் மற்றும் நந்திக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள் பிரகாரத்தில் உலா நிகழ்ச்சியும், அன்னதானம் வழங்கப் பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் ஆலய குருக் கள் சரவண சிவாச்சாரியர் செய்திருந்தார்.