பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
புதுச்சேரி: பஞ்சவடி பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம், மலேசியா கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில், ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மலேசியா, கோலாலம்பூர், பத்துமலை திருத்தலம், அலர்மேல்மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று மாலை, மத்திய திருப்பதி என அழைக்கப்படும், புதுச்சேரி அருகில் உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டினால், ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யா ணம் நடத்தி வைக்கப் பட்டது.அதனையொட்டி நேற்று மாலை4:00 மணிக்கு, மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.தாமல் ராமக்கிருஷ்ணன், பத்துமலை அலர்மேல்மங்கா சமேத வெங்கடாசலபதி கோவிலின் மகிமை, திருக்கல்யாண வைபவ வர்ணனை நடந்தது.
மாலை 5:10 மணிக்கு, அறங்காவலர்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா மற்றும் அறங்காவலர்களுக்கு சங்கல்பத்தை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு காசி யாத்திரை, 5:45 மணிக்கு திருக்கல்யாண மாலை மாற்றுதல், மாலை 6:40 மணிக்கு புண்யாஹவாசனம், கண்ணுஞ்சல், பிடி சுற்றுதல், அக்னி பிரதிஷ்டை,மாலை 6:50 மணிக்கு பாலிகை பூஜை, அங்குரார்பணம், ராமபாதுகா பூஜை, இரவு 7:10 மணிக்கு வஸ்த்ர தாரணம், இரவு 7:20 மணிக்கு கோத்ர ப்ரவரம், கன்னிகாதனம், மாங்கல்ய பூஜை மற்றும் திருமாங்கல்ய தாரணம் நடந்தது.இரவு 7:45 மணிக்கு ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்தை (தேங்காய் விளையாடுதல் தொடர்ந்து, ஸ்ரீதேவி ஸ்ரீபூமி தேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திவ்ய தம்பதிகளின் அட்சதை ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி நடந்தது. பின்னர் இரவு 8:10 மணிக்கு திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது.திருக்கல்யாண வைபத்தை, அறங்காவலர் கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா மற்றும் பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், துணை தலைவர் யுவராஜன், பொருளாளர் கச்சபேஸ்வரன், அறங்காவலர்கள் கே.வெங்கட்ராமன், பழனியப்பன், ராஜகோபாலன், செல்வம் தலைமையிலான திருக்கல்யாண வைபவ சிறப்பு குழுவினர் நடத்தி வைத்தனர்.