பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதியில் சனிப்பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சனிக்கிழமையன்று வரும் பிரதோஷ நாள், சிறப்பு மிக்கதாக வழிபாடு நடக்கிறது.
உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் சனிப்பிரதோஷத்தையொட்டி அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன.
பிரதோஷதினத்தில், கொடிமரம் அருகே உள்ள நந்திதேவர், மற்றும் காசி விஸ்வநாத சுவாமிகளுக்கு, தண்ணீர், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பிரதோஷ சிறப்பு பூஜையைக் காண, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மாலையில், நந்தி வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன், காசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் சுவாமிகள் எழுந்தருளி, கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.திருமூர்த்திமலை காய்த்ரி பீடம் சிவன் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.
தில்லைநகர், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ் வரர் கோவில் உட்பட சிவபெருமான் கோவில்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.