வால்பாறை:தர்ம ப்ரஸார் சமிதி (விஷ்வ ஹிந்து பரிஷத்) சார்பில், உலகநல வேள்வி -ஜலாபி ஷேக விழா நடந்தது.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் நாட்ராயசாமி தலைமை வகித்தார்.விழாவில், உலக அமைதிக் காக சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்துபல்வேறு கோவில்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், செயல்தலைவர் இருளப்பன் உட்பட பலர் செய்திருந்தனர்.