பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், பாலாலயம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில், ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்பன், மஞ்சள் அம்மன், விநாயகர் மற்றும் பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன.கோவில் கும்பாபிேஷகம் கடந்த, 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது கும்பாபிேஷகம் நடந்து, 16 ஆண்டுகள் ஆகியுள்ளதால், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ேஹாமம், பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, விமான கலாகர்ஷன பூஜைகள், முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாகுதி, தீபாராதனை, கலசாபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.