இடைப்பாடி: அன்னாபிஷேக விழாவையொட்டி, பூலாம்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஏராள மான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவன், ஐப்பசி மாத பவுர்ணமியில் தானே உணவாக மாறி பக்தர்களுக்கு உணவளிப்பதாக ஐதீகம் கூறுகிறது.
அதன்படி, நேற்று (நவம்., 11ல்), சிவன் கோவில்கள் அனைத்திலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இடைப்பாடி அருகே, பூலாம்பட்டியில் உள்ள சிவகாமசுந்தரி, கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவலிங்கம், முழுவதும் அரிசி சாதத்தால் மூடப்பட்டது. அந்த சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.