அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ச்சங்கம், மரம் நடுவோர் சங்கம் மற்றும் சிவனடியார்கள் சார்பில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.ஓய்வு பெற்ற ஆசிரியர் சிதம்பரநாதன் தலைமையில் இசையுடன் திருவாசகம் 51 தலைப்புகளில் பாடப்பட்டது.முன்னதாக நடராஜர், அண்ணாமலை சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.