பதிவு செய்த நாள்
12
நவ
2019
12:11
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று (நவம்., 11ல்), அன்னாபிஷேகம் நடந்தது. தர்மபுரி, நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, இரவு, 7:15 மணிக்கு மஹாலிங்கேஸ்வர லிங்கத்துக்கு, பால், தயிர், நெய், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், 7:30 மணிக்கு, 25 கிலோ அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை வழிபாடு நடந்தது. பின், லிங்கத்துக்கு சாற்றப்பட்டஅன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானே ஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால் வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில் களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, நேற்று அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டுகள் நடந்தன.