ராமநாதபுரத்தில் வழிவிடு முருகன் கோயிலில்அர்ச்சனை கட்டணம் உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2019 02:11
ராமநாதபுரம்:ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் அர்ச்சனை கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், இது தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலின் மேன்மைக்காகவும், வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப பழைய கட்டணத் தை (அர்ச்சனை கட்டணம்) உயர்வு செய்ய பரம்பரை அறங்காவலரால் தீர்மானிக்கப்பட்டு ள்ளது. அதன்படி பழைய அர்ச்சனை கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட வுள்ளது.
எனவே இது தொடர்பான ஆலோசனை, ஆட்சேபனைகள் இருந்தால் இந்த அறிவிப்பு கிடைத்த 10 நாட்களுக்குள் பொது மக்கள், ஆன்மிக பெரியவர்கள் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் அலுவலகத்திற்கு மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். மேலும் இது குறித்த அறிவிப்பு நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது, என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.