பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
கிருஷ்ணகிரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் நேற்று அன்னாபி ஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி குரு மூர்த்தி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று (நவம்., 12ல்) அன்னாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று (நவம்., 12ல்), காலை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், சிவலிங்கத் திற்கு அன்னாபிஷேகம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து பிரகார உற்சவம் மற்றும் மேல்தீபம் ஏற்றப்பட்டது. அன்னாபிஷேகம் செய்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், காவேரிப்பட்டணம் கோட்டையில் உள்ள, அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, 38ம் ஆண்டு அன்னா பிஷேக விழா நடந்தது. இதில், சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது.