ப.வேலூர் திருவேலீஸ்வரர் கோவிலில் 100 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2019 02:11
ப.வேலூர்: ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ் வரர் கோவிலில், 100 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நடந்தது. நேற்று 12 ல், மா,லை 5:00 மணிக்கு மேல் திருவேலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 6:00 மணியளவில் அன்னத்தால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சிவலிங்கம் மீது முழுமையாக அன்னத் தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.