பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய விநாயகர் தேர் கட்டுமான பணியை, அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், வைகாசி விசாக தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, விநாயகர், செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் உள்ளிட்ட நான்கு தேர்கள் வடம் பிடிப்பது வழக்கம். திருத்தேர் பழமையானது என்பதால், அவற்றை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக் கையை ஏற்று, முதற்கட்டமாக, புதிதாக விநாயகர் தேர் கட்டுமான பணிக்காக, 16.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதையடுத்து, திருத்தேர் கட்டுமானப்பணி நேற்று (நவம்., 12ல்) துவங்கியது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, தலைமை வகித்து, பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 90 லட்சம் ரூபாய் மதிப்பில், அர்த்தநாரீஸ்வரர் மலைப்பாதை மேம்பாட்டு பணியையும், அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., பொன் சரஸ் வதி, கோவில் உதவி ஆணையர் சரவணன், ஆய்வாளர் இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்னர்.