சின்னசேலம்:சின்னசேலம் சிவன் கோவிலில் பைரவருக்கு வெள்ளி கவசம் அளிக்கப்பட்டது. பூஜையையொட்டி, பக்தர் ஒருவர் பைரவருக்கு 5 கிலோ அளவிலான வெள்ளிக் கவசத்தை சுவாமிக்கு வழங்கினார். சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றி வழிபட்டனர். தலைமை அர்ச்சகர் மோகன், ஸ்ரீதர் குருக்கள் பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.