நலுங்கு என்பது மங்களச்சடங்கு. இதில் மணமக்கள் சிறுசிறு விளையாட்டுக்களில் ஈடுபடுவர். வெற்றி, தோல்வியைக் கடந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும், தங்களுக்குள் புரிந்து கொள்ளவும் வழிகாட்டும் நிகழ்வு இது. அதே நேரம் பொழுதுபோக்கு, மகிழ்ச்சிக்காகவும் இதைச் செய்கின்றனர்.