பதிவு செய்த நாள்
13
ஜன
2025
11:01
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத்தில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், ஏற்றப்பட்ட மஹா தீப நெய்யில் மூலிகை பொருட்கள் சேர்த்து “மை”யாக மாற்றப்பட்டு முதலில் ஆருத்ரா தரிசனத்தில், ஆயிரம் கால் மண்டபத்தில், எழுந்தருளிய நடராஜர் பெருமானுக்கு "தீப மை" வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜையின் போது பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கார்த்திகை தீபத்தில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப நெய்யை மூலிகை பொருட்களுடன் சேர்த்து “மை”யாக மாற்றி முதலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, ஆயிரம் கால் மண்டபத்தில், நடராஜர் பெருமானுக்கு சிவாச்சாரியார் வைத்தார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் எழுந்தருளி மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.