பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
திருப்பூர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா மஹா தரிசனப் பெருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆடல் வல்லானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடராஜருக்கும், சிவகாமியம்மனுக்கும் விபூதி, வெண்ணெய், அன்னம், பஞ்சகவ்யம், சந்தனாதிதைலம், நெல்லிப்பொடி உள்ளிட்ட 108 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.