நாளை கார்த்திகை முதல் தேதி.. சபரிமலைக்கு மாலையணியும் போது சொல்லும் மந்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2021 02:11
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இடையில் கோயிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையை கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதமிருந்து உணவை குறைத்து ஐயப்பன் புகழ் பாட வேண்டும். இதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாக பெறலாம்.