Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லுார்பாளையம் கிராமத்தில் ... பட்டினப்பிரவேசம் விழா : நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி தர்மபுரம் ஆதீனம் குரு மூர்த்தங்களில் வழிபாடு பட்டினப்பிரவேசம் விழா : நாற்காலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் பிரம்மோற்சவம் : பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் பிரம்மோற்சவம் :  பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

20 மே
2022
06:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் வரும் 26ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழா ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கிறது. உற்சவத்தையொட்டி இரு கோவில்களிலும் பந்தக்கால் முகூர்த்த நடந்தது.

ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற பல கோவில்கள் உள்ளன. கடந்த, 2020, 21ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த இரு ஆண்டுகளாக பல கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து ஊரடங்கு தளர்வுகள் முற்றிலும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், காஞ்சியில் உள்ள பிரபல கோவில்களில் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் வரும் 26ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதேபோல  குமரகோட்டம், சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகப்பெருவிழா வரும் ஜூன் 3ல் துவங்குகிறது. இதையொட்டி இரு கோவில்களிலும் இன்று பந்தக்கால் உற்சவம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு மேளதாளம் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத பந்தக்காலுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி இரு கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.

குமரகோட்டம் வைகாசி விசாப்பெருவிழா விபரம்:

ஜூன் 3  கொடியேற்றம்  ஆடு வாகனம்
ஜூன்4   சூரியப்பிரபை  அன்ன வாகனம்
ஜூன்5  தேவேந்திர மயில் வாகனம்  கேடயம் மங்களகிரி
ஜூன் 6  கேடயம் மங்களகிரி  யானை வாகனம்
ஜூன் 7  பல்லக்கு   சந்திரப்பிரபை
ஜூன் 8  கண்ணாடி விமானம்  கேடயம் மங்களகிரி
ஜூன் 9  திருத்தேர் (சுப்பிரமணியர்)   –
ஜூன்10  மான் வாகனம்  குதிரை வாகனம்
ஜூன் 11 பல்லக்கு   மாவடி சேவை
ஜூன் 12 திருத்தேர் (சண்முகப்பெருமான்)  –
ஜூன் 13 வள்ளி திருக்கல்யாணம்  சூரன் மயில் வாகனம்
ஜூன் 14 கேடயம் மங்களகிரி  கேடயம் மங்களகிரி

வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் விபரம்

மே 26 கொடியேற்றம்  சிம்ஹ வாகனம்
மே 27 ஹம்ஸ வாகனம் சூரிய பிரபை
மே 28 கருடசேவை  ஹனுமந்த வாகனம்
மே 29 சேஷ வாகனம்  சந்திர பிரபை
மே 30 மோகினி அவதாரம் யாளி வாகனம்
மே 31 சப்பரம்    யானை வாகனம்
ஜூன்1 எடுப்பு தேர்   –
ஜூன்2 பல்லக்கு   குதிரை வாகனம்
ஜூன்3 தீர்த்தவாரி   புண்ணியேகோட்டி விமானம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar